Tamil Nadu
அமமுகவின் 4வது கட்ட வேட்பாளர் பட்டியல்!
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் ஏற்கனவே மூன்று கட்ட வேட்பாளர் பட்டியலை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட நிலையில் சற்றுமுன் நான்காவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்
இந்த வேட்பாளர் பட்டியலில் மொத்தம் 7 வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது, இத்துடன் அமமுக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் முடிந்து விட்டதாகவே கருதப்படுகிறது
ஏற்கனவே 195 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருந்த நிலையில் தேமுதிகவுக்கு தற்போது 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஒரு சில தொகுதிகளில் வேட்பாளர்கள் வாபஸ் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
வரும் தேர்தலில் அமமுக் மற்றும் தேமுதிக இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதை அடுத்து இந்த தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
