உங்க ஆட்சியா இருந்தாலும் ‘அம்மா உணவகம்’ ஆரோக்கியமா செயல்பட வேண்டும்!

அம்மா உணவகம்

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. பத்தாண்டுக்கு பின்னர் தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றது.கமல்

அதிமுக ஆட்சியில் பெரிதும் பயனுள்ளதாக காணப்பட்ட திட்டம் எதுவென்றால் அம்மா உணவகம். இந்த அம்மா உணவகத்தில் மிக குறைந்த விலையில் உணவுகள் கிடைக்கும். இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியில் அம்மா உணவகத்தை ஆரோக்கியமாக செயல்படுத்த வேண்டுமென்று கூறியுள்ளார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்.

அதன்படி அம்மா உணவகம் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் சிறப்பாக செயல்பட அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.

சிறிய நாட்டத்தை காரணம் காட்டி நல்ல திட்டங்களை சிதைப்பது மக்கள் நலம் நாடும் அரசுக்கு அழகல்ல என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறினார். ஏழை, எளியோரின் பசியாற்றும் அவற்றை சிறப்பாக செயல்படுத்துவது அரசுக்கு பெருமை தரும் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print