News
அதிமுகவில் அம்மா உணவகம்! திமுகவில் கலைஞர் உணவகம்!
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தமிழகத்தில் பயங்கரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் பலம் வாய்ந்த கட்சியாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் தனது வேட்பாளர்களை வெளியிட்டது. தற்போது அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.

அவர் தேர்தல் அறிக்கை வெளியிடும் முன்னர் கூறினார், இந்த தேர்தலில் முதல் கதாநாயகனாக தங்கள் கட்சியின் வேட்பாளர் தொடர்ந்து, இரண்டாவது கதாநாயகராக தேர்தல் அறிக்கையும் உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் அவர் அதிமுக கட்சிக்கு தொடர்பான சில தேர்தல் அறிக்கைகளையும் அவர் வெளியிடுகிறார்.
அதன்படி அதிமுக ஆட்சியில் இருந்தபோது அம்மா உணவகம் திறக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. தற்போது திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கலைஞர் உணவகம் என்ற பெயரில் உணவகம் திறக்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் அவர் அதிமுகவின் முதலமைச்சராக இருந்து மரித்த அம்மா ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரிக்கப் படும் எனவும் அவர் கூறினார்.
இதுபோன்று திருக்குறளை தேசிய மொழியாக நூலாக மாற்றமத்திய அரசிடம் கூறப்படும் எனவும் அவர் தேர்தல் அறிக்கையில் கூறிக் கொண்டிருக்கிறார். இனி ரேஷனில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக கொடுக்கப்படும் எனவும் மு க ஸ்டாலின் தன் தேர்தல் அறிக்கையில் கூறுகிறார்.
