அம்மா மினி கிளினிக்குகள் மூடல்- அமைச்சர் மா.சுப்ரமணியன்

கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக்குகள் என்ற பெயரில் கிளினிக்குகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் அம்மா மினி கிளினிக்குகள் இன்று முதல் மூடப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது, அம்மா கிளினிக்குகள் முறையான கட்டிடத்தில் செயல்படவில்லை எனவும் அம்மா கிளினிக் மூலம் எத்தனை பேர் சிகிச்சை பெற்றனர் என தெரியவில்லை எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இதில் வேலை பார்த்த மருத்துவ பணியாளர்கள் வேறு பணிகளில் நியமிக்கப்படுவார்கள் எனவும் ஓராண்டு தற்காலிக பணி முடித்த செவிலியர்களுக்கு நிரந்தர பணி கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment