என்றும் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் அம்மாதான்! அதில் மாற்றமே இல்லை:-ஜெயக்குமார்;

நேற்றையதினம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் புதிய அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார். இன்று காலை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற 7ஆம் தேதி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெறும் என்று கூறியுள்ளனர்.

ஜெயக்குமார்

இவ்வாறு தினந்தோறும் அதிமுக கட்சியில் பதவி பற்றி செய்திகள் வெளியாகிக் கொண்டே வருகிறது. ஆனால் தற்போது வரை அதிமுகவின் பொதுச் செயலாளர் யார் என்பது பெரும் குழப்பமாக காணப்படுகிறது.

சசிகலாவின் தொண்டர்கள் அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா என்று முழக்கம் இடுகின்றனர். இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா தான் என்று கூறியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இத்தகைய தகவலை வழங்கினார். காரில் அதிமுக கொடியை கட்டி வரும் சசிகலா மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

யாரோ சிலர் பொது செயலாளர் என்று கூறுவதால் அவர் தலைவராக முடியாது என்று ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக கூட்டணி கட்சிகள் வருவதும், போவதும் அவரவர் விருப்பம்தான் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment