News
மீண்டும் தமிழகம் வருகிறார் அமித்ஷா: நாளை எங்கே பிரச்சாரம்?
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் மாநில கட்சி தலைவர்கள் மட்டுமின்றி தேசிய கட்சி தலைவர்களும் அவ்வப்போது தமிழகம் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
ஏற்கனவே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட பல தேசிய தலைவர்கள் தமிழகம் வந்து பிரசாரம் செய்திருக்கின்றனர். இந்த நிலையில் நாளை மீண்டும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார்.
நாளை காலை 11 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாகர்கோவிலில் ஆயுதப்படை மைதானத்தில் ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்குகிறார். அதன்பின் அவர் சுசீந்திரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு அதன் பின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
அமித்ஷாவுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக ஏற்கனவே 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடதக்கது
ஏற்கனவே கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பொன்ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்ற நிலையில் இந்த முறை மீண்டும் அவரை வெற்றி பெற வைக்க அமித்ஷா தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
