Connect with us

அமிதாப் பச்சனுக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதி!!

1750717 amithab

பொழுதுபோக்கு

அமிதாப் பச்சனுக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதி!!

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா என்னும் கொடிய வைரஸ் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக சினிமா பிரபலங்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்படுவது அதிகரித்து வருகிறது.

அந்த வகையில்   பிரபல நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.  இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்த சூழலில் மீண்டும் அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இத்தனை அறிந்த அவருடைய ரசிகர்கள்  விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top