தமிழ்நாடு – தமிழகம் இரண்டுமே ஒன்றுதான்.. பாஜக நிர்வாகி குஷ்பு!

தமிழ்நாட்டில் திமுக – பாஜக இடையே முற்போக்கு மோதல்கள் நிலவி வருகிறது. சமீபத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி தமிழகம் என கூறியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக நிர்வாகி குஷ்பு கூறுகையில் அனைவரும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் அண்ணாமலை தலையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென கூறுவதால் எல்லா பெண்களும் வெளியே போகவில்லை என தெரிவித்தார்.

அதன் படி, திமுக பேச்சாளர் எண்ணைப்பற்றி தவறாக கூறும் போது பாஜக சார்பில் போராட்டம் நடத்தி அவரிடன் கையெழுத்து வாங்கியதாக தெரிவித்தார். அதே போல் ஆளுநர் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அப்போது தமிழ்நாடு.. தமிழகம் இரண்டுமே எனக்கு ஒன்றுதான். இடத்திற்கு ஏற்றார்போல் எப்படி வேண்டுமானாலூம் அழைக்கலாம் என கூறினார். மும்பையில் பிறந்திருந்தாலும் நானும் தமிழச்சிதான்.. ஆளுநர் கூறுவதில் என்ன தவறு இருக்கிறது? என தெரிவித்தார்.

வருகின்ற பொங்கலுக்கு துணிவா? வாரிசா? எந்த படத்தை பார்ப்பீர்கள் என கேட்கப்பட்டது. அப்போது பேசிய குஷ்பு ஒன்றும் செய்யாமல் வீட்டிலே இருப்பேன் என தெரிவித்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.