Connect with us

அமெரிக்க அதிபருக்கு கொரோனா; வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

joebiden

செய்திகள்

அமெரிக்க அதிபருக்கு கொரோனா; வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

கொரோனாவின் கோரத்தாண்டவம் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டு வருகிறது. நம் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அதிகரித்த கொரோனாவின் பாதிப்பு தற்போது குறைந்து இருந்தாலும் இந்தியாவை தவிர பிற நாடுகளில் சற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகவே பதிவாகி கொண்டு வருகிறது.

அதுவும் குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நாளுக்கு நாள் கொரோனாவின் வீரியம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஏற்கனவே குரங்கு அம்மை நோயின் பாதிப்பு எண்ணிக்கை அங்கு பரவலாக தென்படுவதால் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கையும் மக்களுக்கு பெறும் இன்னலை அளித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வெள்ளை மாளிகை தகவல் அளித்துள்ளது. இதனால் அவர் இன்னும் சில நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார் என்றும் தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top