2023ல் கொரோனாவால் 10 லட்சம் உயிர் போகலாம்.. அமெரிக்க சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரொனா வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் மிக வேகமாக பரவியது என்பதும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பதும் இலட்சக்கணக்கானோர் பலியாகினர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் 2022ஆம் ஆண்டில் தான் கொரொனா வைரஸ் பாதிப்பு குறைந்து தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் புதிய வகை கொரொனா வைரஸ் பரவி வருவதாகவும் அதனால் அந்நாட்டில் உள்ள பல நகரங்களில் ஊரடங்கு உட்பட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இறப்பு விவரம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

கொரோனா-சீனாஇந்த நிலையில் அமெரிக்க சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2023ஆம் ஆண்டு மட்டும் சுமார் 10 லட்சம் பேர் கொரொனாவால் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் தற்போது கொரொனா வைரஸ் கடுமையாக பரவி வருவதாகவும் இது மேலும் அதிகமாக பரவி இறப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்தும் என்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொரொனாவால் 3 லட்சத்திற்கும் அதிகமாக இறப்பு இருக்கும் என்றும் அடுத்த ஆண்டுக்குள் அது 10 லட்சத்தை தாண்டும் என்றும் கூறியுள்ளது.

ஏற்கனவே சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அந்நாட்டில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை தெரிவிக்க மறுக்கும் நிலையில் அமெரிக்க சுகாதார நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.