அமெரிக்காவில் பயங்கரம்.. ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட சிறுவன்!!

கடந்த சில நாட்களாகவே அமெரிக்காவில் குற்றச்சம்பவங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் சற்றும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் விர்ஜினியா மாகாணத்தில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளி ஒன்றில் 6 வயது சிறுவன் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் ஒருவரை சிறுவன் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சற்றும் எதிர்பாராத விதமாக சுட்டுள்ளார்.

பெற்ற குழந்தையை விற்ற தாய்! விசாரணையில் திடுக்கிடும் பின்னணி?

இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது எதேச்சையாக நடந்த விபத்தல்ல எனவும் சிறுவனுக்கு துப்பாக்கி யார் கொடுத்தது? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.