Connect with us

தைவானுக்கு நேரடியாக ஆதரவு! சீனாவை சீண்டும் அமெரிக்கா!!

china taiwan war

செய்திகள்

தைவானுக்கு நேரடியாக ஆதரவு! சீனாவை சீண்டும் அமெரிக்கா!!

தற்போது உலகத்தில் யுத்தங்களின் செய்திகள் அதிகளவு கேட்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக 2022 ஆம் ஆண்டு தொடக்கம் முதலே யுத்தங்கள் அதிகரித்தது. ஏனென்றால் பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்யா-உக்ரேன் நாட்டின் மீது போரை அறிவித்தது.

இதன் விளைவாக அங்கு ஏராளமான கட்டிடங்கள் நகரங்கள் சூறையாடப்பட்டு ராணுவ வீரர்கள் பலரும் உயிரிழந்தனர். அனேக இடங்களில் பொதுமக்கள் பரிதாபமாக கொலை செய்யப்பட்டனர்.

இதற்கு உலக நாடுகள் பலவும் ரஷ்யாவிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தது. மேலும் உக்ரேன் நாட்டுக்கு பலரும் பொருள் உதவி மற்றும் ராணுவ உதவிகளை அனுப்பி வைத்து உதவி செய்தனர்.

குறிப்பாக அமெரிக்கா தொடர்ந்து உக்ரேனுக்கு ஆதரவு தெரிவித்து கொண்டு வந்தது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் ஒரு நாட்டிற்கு ஆதரவு அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

அதன்படி சீனா தைவான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்க படைகள் பாதுகாக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். ஏற்கனவே சீனா-தைவான் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டு உள்ள நிலையில் இவ்வாறு தைவானுக்கு அமெரிக்கா ஆதரவளித்துள்ளது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top