Connect with us

அடுத்தடுத்து உதவும் அமெரிக்கா; இலங்கைக்கு சென்ற உயர்மட்ட குழு..!!

usa sri lanka

செய்திகள்

அடுத்தடுத்து உதவும் அமெரிக்கா; இலங்கைக்கு சென்ற உயர்மட்ட குழு..!!

உலகளவில் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு எந்த ஒரு நாடுகளும் உதவ முன்வரவில்லை என்று கூறலாம். ஆனால் நம் இந்தியா தொடர்ந்து பல்வேறு விதமான அத்தியாவசிய தேவைகளை வழங்கி உதவிகளை செய்து கொண்டு வந்தது.

அதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவும் மெல்ல மெல்ல பல்வேறு உதவிகளை செய்து இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இலங்கையில் அமெரிக்கா குழு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவ அமெரிக்காவின் உயர்மட்ட குழு இலங்கை சென்றது. இலங்கைக்கு ஏற்கனவே அமெரிக்கா பல்வேறு விதமான உதவிகளை அறிவித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நிபுணர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் என பல தரப்பினரும் ஆலோசனை நடத்த உள்ளதாக அமெரிக்க குழு கூறியுள்ளது. இதனால் அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் ஒவ்வொன்றும் வரிசையாக இலங்கைக்கு உதவும் என்று தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top