அமெரிக்காவில் தொடர்ந்து பரவி வரும் கொரோனா- தினசரி ஓமிக்ரான் பரவல் அதிகரிப்பு மக்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் தீவிரமாக ருத்ர தாண்டவமாடும் நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.

இந்தியா மட்டுமல்லாது 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு தினம் தோறும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் சராசரி பாதிப்பு 1.50 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில் அமெரிக்காவில்தான் இந்த எண்ணிக்கை அதிக அளவில் பரவி வருகிறது.

அதன்படி அமெரிக்காவில் தினசரி பாதிப்பு 4.67 லட்சத்தை எட்டியுள்ளது. புதிதாக பரவியுள்ள ஓமிக்ரான் கொரோனா பரவல் அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ளது.

இதுவரை சமீபத்தில் பரவிய கொரோனாவால் அமெரிக்காவில் 669 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவை விட அமெரிக்காவில் தடுப்பூசியை பலர் முழுமையாக செலுத்திக்கொண்டாலும் தினசரி பாதிப்பு அதிகமாகி வருவதால் அமெரிக்க மக்கள் திணறி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment