Connect with us

மதுபான சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம்-உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு;

மதுபானம்

செய்திகள்

மதுபான சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம்-உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு;

மதுபான சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம்-உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு;

நம் தமிழகத்திலேயே அதிக அளவு வசூலாகும் தொழில் என்றால் அதனை மதுபான தொழில் என்றே கூறலாம். இருப்பினும் ஆங்காங்கே மதுபான கடைகளுக்கு எதிராக போராட்டம் நடைபெறும்.

மதுபான கடை வைப்பதற்கு பல்வேறு விதிகள் எடுக்கப்படும். கடை மட்டுமின்றி மதுபான சில்லரை விற்பனை களிலும் விதிகள் விதிக்கப்படும். இந்த நிலையில் மதுபான சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி மதுபான கடை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ஆட்சியர்கள் பரிசீலிக்கும் வகையில் சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம் நிகழ்ந்துள்ளது. மதுபான சில்லரை விற்பனை விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

ஆட்சேபங்களை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்காமல் எந்த கடைகளையும் திறக்க அனுமதிக்க கூடாது என்று விதி திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆட்சியரின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும் விதிகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அனுமதியால் பொது மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top