’வாடிவாசல்’ படத்தில் பிரபல இயக்குனர்: உறுதி செய்த அமீர்!

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

குறிப்பாக இந்த படத்தில் நடிக்க இருக்கும் காளை உடன் சூர்யா பழகி வருவதாகவும் அதுமட்டுமின்றி இந்த படத்திற்கான அனிமேஷன் பணிகளும் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யாவுடன் இயக்குனர் அமீர் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யா நடித்த ‘மெளனம் பேசியதே’ என்ற திரைப்படத்தை அமீர் இயக்கிய நிலையில் மீண்டும் சூர்யாவுடன் அமீர் இணையவுள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment