அமீர் மட்டுமே அதை செய்தார்!.. இறுதிச்சுற்றுக்கு இன்ஸ்பிரேஷன் முத்தழகு தான்.. சுதா கொங்கரா போட்ட ட்வீட்!..

இயக்குனர் அமீர் குறித்தும் அவர் இயக்கிய ராம் படம் குறித்தும் சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கரா கடுமையாக விமர்சித்திருந்தாதாக பேச்சுக்கள் அடிபடத் தொடங்கிய நிலையில், சமூக வலைதளங்களில் சுதா கொங்கராவுக்கு எதிராக அமீர் ஆர்மியினர் திரண்டு விட்டனர்.

சுதா கொங்கராவே கதையை திருடித்தான் இறுதிச்சுற்று படத்தை இயக்கினார் என்றும் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த பேட்டி இதுதான் என ஒரு பேட்டியையும் வைரலாக்கி வருகின்றனர்.

அமீர் அண்ணன் இயக்கம் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்:

சூர்யாவின் குடும்பம் மற்றும் நண்பர்கள் அனைவருமே மாஃபியா தான் என்கிற ரேஞ்சுக்கு நெட்டிசன்கள் ஞானவேல் ராஜா விவகாரத்தில் சுதா கொங்கராவையும் சுத்து போட ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில், சுதா கொங்கரா அதற்கும் தனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதை விளக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் புதிய போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், இறுதிச்சுற்று படத்தில் இடம்பெற்ற மதி உருவாக காரணமே பருத்திவீரன் முத்தழகு தான் என்றும் அப்படியொரு பெண்ணிய கதாபாத்திரத்தை இதுவரை தமிழ் சினிமாவில் யாருமே எழுதவில்லை என்றும் எப்படி ஒரு ஆண் இப்படி பெண்ணிய கதாபாத்திரத்தை எழுதினார் என நான் வியந்துள்ளேன் என்றும் நான் இயக்கிய இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று படங்களில் மதியாக நடித்த ரித்திகா சிங் மற்றும் பொம்மியாக நடித்த அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோரிடம் முதலில் பருத்திவீரன் முத்தழகு பார்த்து விட்டு வந்து ஷூட்டிங் பக்கம் வாங்க என சொல்லியிருக்கிறேன்.

சுதா கொங்கரா ட்விட்டர் பதிவு:

அந்தளவுக்கு இயக்குனர் அமீரின் படைப்புக்கு நான் மரியாதை செலுத்தி வருகிறேன். இறுதிச்சுற்று வெளியான சமயத்தில் நல்லாவே ஞாபகம் இருக்கிறது. தமிழ் சினிமாவில் என்னை அழைத்து பாராட்டிய முதல் மனிதர் அமீர் அண்ணன் தான் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் சுதா கொங்கராவும் கதை திருடி தான் என சோஷியல் மீடியாவில் அடுத்த பஞ்சாயத்து கிளம்பிய நிலையில், உடனடியாக வெள்ளை கொடியை காட்டி அமீர் ஆர்மியினரிடம் சமாதானம் ஆகி விட்டாரா என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்தியில் அக்‌ஷய் குமாரை வைத்து சூரரைப் போற்று படத்தை எடுத்து வரும் சுதா கொங்கரா அடுத்ததாக சூர்யாவை வைத்து புறநானூறு எனத் தொடங்கும் படத்தையும் இயக்கப் போவது குறிப்பிடத்தக்கது.

அமீர் மற்றும் ஞானவேல் ராஜா விவகாரத்தில் இன்னும் என்னவெல்லாம் பிரச்சனை கிளம்பும் என்றே தெரியவில்லை என்கின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.