அரசு மருத்துவம்னையில் ஆம்புலன்ஸ் ஸ்டிரெச்சர் சேதம்! – பொதுமக்கள் அதிர்ச்சி!

புதுச்சேரி ரயில் நிலையத்தில் கொல்கத்தாவை சேர்ந்த குடும்பத்தினர் வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களுடன் வந்த சிறுவனுக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அரசு ஆம்புலன்ஸ்-க்கு அழைப்பு விடுத்தனர். அப்போது ஸ்டிரெச்சர் இல்லை என கூறப்படுகிறது. இதனால் தள்ளுவண்டியில் சிறுவனை ஆம்புலன்ஸ்ஸில் அழைத்து வந்துள்ளனர்.

அதிர்ச்சி! அரசு விதிமுறைகளை மீறி மது விற்பனை..!

இத்தகைய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் கேட்டப்போது ஸ்டிரெச்சர் பழுதாகி நீண்ட நாள்கள் ஆகியதாக தெரிவித்துள்ளனர்.

இதனை அறிந்த தமிழிசை செளந்தர்ராஜன் ஆய்விற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அரசு மருத்துவ மனைகளில் போதிய படுக்கை வசதி, மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.

கவனமா இருங்க! இன்று 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..!!!

இந்த சூழலில் ஸ்டிரெச்சர் பழுதாகி சிறுவனை சிகிச்சைக்கு தள்ளுவண்டியில் கொண்டு சென்ற அவலம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment