ஆம்புலன்ஸ் சேவைக்கு பணம் இல்லை: தாயின் சடலத்தை சுமந்த மகன்!

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சி நடைப்பெற்று வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் – பாஜக இடையே கடும் முற்போக்கு மோதல் நிலவி வருகிறது. அம்மாநிலத்தில் ஒருவர் தாயின் உடலை சுமார் 40 கி.மீ தூரம் வரையில் தோளில் சுமந்து சென்ற வீடியோ காண்போரை பதறவைத்துள்ளது.

இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் கிராந்தி என்ற பகுதியில் வசிப்பவர் ஜாய் கிருஷ்ண தீவான் (வயது 72). இவருக்கு ராம் பிரசாத் என்ற மகன் உள்ளார். இந்த சூழலில் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஜாய் கிருஷ்ண தீவானுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

மதுரை: ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா!

இதற்கிடையில் கடந்த 2 தினங்களுக்கு மும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக தெரிகிறது. இதனையடுத்து உடலை வீட்டிற்கு எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ்க்கு ரூ.3 ஆயிரம் பணம் கேட்டுள்ளனர்.

அதே சமயம் ராம் பிரசாத்திடம் பணம் இல்லாததால் தந்தையின் உதவியுடன் உடலை ஒரு பெட்ஷீட்டில் போர்த்தி, தோளில் சுமந்த படி எடுத்துச்சென்றுள்ளனர். பின்னர் பாதி வழியில் தனியார் தொண்டு நிறுவனம் ஆம்புலன்ஸின் உதவியுடன் சொந்த ஊருக்கு எடுத்து சென்றது.

மனைவியின் கண் முன்னே… பிரபல ரவுடி வெட்டிக் கொலை!

இது குறித்து வீடியோ காட்டுத்தீயாய் இணையத்தில் பரவியது. மேலும், அம்மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்து நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.