அம்பேத்கரை அவமதித்த விவகாரம்: நிர்வாகி மீது குண்டாஸ்..!!!

அம்பேத்கரை அவமதித்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது பல கட்சி அரசியல் தலைவர்கள் போஸ்டர் ஒட்டியும், அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அடுத்த ஷாக்!! இந்தியாவில் நுழைந்தது புதிய வகை ‘ BF.7’ கொரோனா..!!

அந்த வகையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் குருமூர்த்தி என்பவர் அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக காவி உடை அணிவித்து, விபூதி பூசி, குங்குமம் வைத்தது போன்ற போஸ்டர் ஒட்டப்பட்டது.

இத்தகைய நிகழ்விற்கு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலபேர் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். அதே சமயம் இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் குருமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இலங்கை கடற்படையினர் அட்டூழியம்: நாகை மீனவர்கள் 11 பேர் கைது..!!!

அதன் ஒரு பகுதியாக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக ஒட்டிய போஸ்டர் விவகாரம் தொடர்பாக அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேலும், கும்பகோணம் கிளைச்சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.