உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரியும் 20 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளதாக கூறப்படும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொருளாதார மந்தநிலை, பணவீக்கம், அனைத்து நாடுகளின் கரன்சிகள் வீழ்ச்சி ஆகியவை காரணமாக உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
கூகுள், பேஸ்புக், ட்வீட்டர், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஏற்கனவே வேலை நீக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் தற்போது உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரியும் 20 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிறுவனத்தின் பல பிராந்தியங்களில் பணிபுரியும் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
முதல்கட்டமாக அமேசான் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அதனை அடுத்து அடுத்த கட்டமாக இன்னொரு 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் என்றும் கூறப்படுகிறது.
அமேசான் நிறுவனத்தின் செலவைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை இன்றியமையாதது என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளதால் அமேசானில் பணிபுரியும் ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.