4 மாதங்களுக்கு முன் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண்ணை மீண்டும் அழைத்த அமேசான்.. செம லக்கி ஊழியர்..!

நான்கு மாதங்களுக்கு முன்ன அமேசான் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர் ஒருவர் தற்போது மீண்டும் அதே நிறுவனத்தில் பணியில் சேர்ந்து உள்ளதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அமேசான் நிறுவனம் 18,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் அவர்களில் ஒருவராக பைஜ் சிப்ரியானி வேலையிழந்தார். பணியில் சேர்ந்த ஒரு சில மாதங்களில் தான் பணியில் இருந்து நீக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியாக இருந்தது என்றும் என்னுடைய டீமுடன் நான் நன்றாக பழகி விருப்பத்துடன் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டது தன்னை அதிர்ச்சியடைய செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் அமேசான் நிறுவனம் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. இதனை அடுத்து அவர் ஏற்கனவே பணி செய்த அதே டீமில் மீண்டும் பணியில் சேர்ந்து உள்ளார் என்பதும் தற்போது தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அமேசான் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றுவது தனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்றும் மீண்டும் அதே டீமுடன் இணைந்துள்ளது எனக்கு மிக மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றும் அமேசான் நிறுவனத்துக்கு நான் மிகவும் நன்றியை உடையவராக இருப்பேன் என்றும் அவர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று மேலும் சில பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அமேசான் நிறுவனத்தில் இருந்து வேலையிலிருந்து நீக்கப்பட்ட பெண் கடந்த நான்கு மாதங்களாக வேறு வேலை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது அதே நிறுவனத்தில் மீண்டும் வேலை கிடைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews