விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலில் பிரதோஷம், பெளர்ணமி, அமாவாசை தினத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் படையெடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினத்தில் அமாவாசை என்பதால் சதுரகிரிக்கு மலைக்கு சென்று தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
கதிகலங்கிய சீனா! ஒரே நாளில் 5 ஆயிரம் உயிரிழப்பு… பீதியில் உலக நாடுகள்!!
இதனால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு தேவையாக பூஜை பொருட்களுடன் சுந்தரமகாலிங்கத்தை தரிசனம் செய்ய குவிந்துள்ளனர்.
இதனிடையே சாமி தரிசனம் செய்ய நாளை வரையில் அனுமதிக்கப்படுவதாக மாவட்ட வனத்துறை அனுமதி அளித்துள்ளது. அதே சமயம் மலைப்பகுதிகளில் அரியவகை மூலிகை செடிகளில் இருப்பதால் தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு; ரூ.1000 வழங்க முதல்வர் உத்தரவு!
இவற்றை மீறி எடுத்து செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதோடு மலைப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.