Connect with us

அமர்நாத் யாத்திரை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!!

death 1 1

செய்திகள்

அமர்நாத் யாத்திரை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!!

அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் மேகவெடிப்பால் குகை வெள்ளம் ஏற்பட்டு இதுவரையில் 17 உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமர்நாத் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் குகைகளுக்கு அருகே உள்ள பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெரும் மழை கொட்டியது. இதனால் தற்போது வரையில் பலியாணவர்களின் எண்ணிக்கையானது 17 ஆக உயர்ந்துள்ளது.

அதே போல் 43 பேர் படுகாயம் அடைந்தும் சிலர் சேற்றில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மோப்ப நாய்களின் உதவியோடு பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் தேடுதல் பணியினை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதே போல் தற்போத குகையின் கீழ் பெருமளவு தண்ணீர் கொந்தளித்து வெளியேறுவதால் யாத்திரைக்கு செல்லும் பணியானது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு மேகவெடிப்பில் சிக்கிய 40 பேரை தேடும் பணியானது தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top