அமர்ஜவான் ஜோதி இடமாற்றம்: காங்கிரஸ் கண்டனம்! டி.ராஜா கருத்து!!
இந்தியா கேட் அருகே உள்ள அமர்ஜவான் நினைவிடத்தில் ஜோதி இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர் 1971 ஆம் ஆண்டு போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை பாஜக அரசு அவமதித்து விட்டதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுகளை பாஜக அரசு அழிக்க முயற்சிப்பதாகவும் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். அதே வேளையில் டி.ராஜா அமர் ஜவான் ஜோதி இடமாற்றத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் அதிகார மையத்துக்கு வந்ததையே அமர்ஜவான் ஜோதி இடமாற்றம் காட்டுகிறது என்று டி.ராஜா கூறினார்.
தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் அமர் ஜவான் ஜோதி இணைக்கப்படுவது ஓர் அரசியல் கேலிக்கூத்து என்று டி.ராஜா கூறினார். பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு தான் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது போல அமர்ஜவான் ஜோதியில் இடமாற்றம் செய்யப்பட்டது.
நியூ விஸ்டா திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தை மாற்றுவது என்பது பாஜக அரசின் எதேச்சதிகாரப் போக்கு என்று டி.ராஜா கூறினார். பாஜக அரசு யாருடைய கருத்துக்கும் செவி சாய்ப்பது இல்லை; எதேச்சதிகார போக்குடன் பாஜக அரசு செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.
மற்றவர்களின் கருத்தை பற்றி கவலைப்படாமல் பாஜக அரசுதான் என்ன நினைக்கிறதோ அதை நிறைவேற்றுகிறது என்றும் ராஜா கூறினார். பாஜக ஆட்சி பெற்ற பின்பு மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது என்றும் கூறினார்.
மாநிலங்களில் நலன்களை பாஜக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்றும் டி.ராஜா கூறினார். கூட்டாட்சித் தத்துவத்தை பாஜக அரசு பொருட்படுத்தவில்லை மாநில அரசுகளை துச்சமென மதிக்கிறது என்றும் டி.ராஜா கூறினார்.
