என்ன சொல்றீங்க! வைல்ட் கார்ட் என்ட்ரி நானா? – தனலட்சுமி விளக்கம்!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். தற்போது பிக்பாஸ் சீசன் 6 இறுதிகட்டத்தை தொட்டுள்ளது. அதே சமயம் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் நிகழ்ச்சி தொடங்கிய முதன் நாளில் இருந்தே சக போட்டியாளர்கள் மத்தியில் சண்டை கட்டுவது, விளையாட்டில் அதிக கவனம் செலுத்தும் போட்டியாளர் தனலட்சுமி என்று கூறினால் மிகையாகாது. இவரது செயலுக்காக ரசிகர் பட்டாளம் ஏராளம் உள்ளதென்றே கூறலாம்.

thana

இந்த சூழலில் கடந்த வாரம் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தனலட்சுமி வெளியேற்றப்பட்டார். இதற்கிடையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனலட்சுமி லைவ்வில் வந்திருந்த நிலையில் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அதன் படி, ரசிகர் ஒருவர் ஏன் இவ்வளவு நாளைக லைவ்வில் வரவில்லை? என கேள்வியெழுப்பினார். இதற்கு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் நான் நானா இல்லை… இப்போது தான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதாக கூறினார்.

thana2

அதே போல் பிக்பாஸ் டைட்டில் வின்னராக நான் இருந்தால் எனக்கு வெறும் பணமும் அவார்டும் கிடைத்திருக்கும்… ஆனால் இதைவிட ரசிகர்களின் ஆதரவு நிறைய இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். மேலும், பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி இருந்தால் கட்டாயம் நான் செல்வேன் என தெரிவித்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.