நான் விஜய், அஜித் படங்களை நிராகரிக்கிறேனா…? சாய் பல்லவி விளக்கம்…

சாய் பல்லவி தென்னிந்திய நடிகையும் சிறந்த நடன கலைஞரும் ஆவார். நீலகிரி மாவட்டத்தில் பிறந்து, கோயம்புத்தூரில் படித்து வளர்ந்தவர். இவர் முறையாக பயிற்சிப் பெற்ற நடன கலைஞரும், மருத்துவரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடனத்தில் மீது இருந்த அதீத ஆர்வத்தால் சாய் பல்லவி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். 2005 ஆம் ஆண்டு வெளியான ‘கஸ்தூரி மான்’, 2008 ஆம் ஆண்டு வெளியான ‘தாம் தூம்’ ஆகிய திரைப்படங்களில் பின்னணியில் சிறிய கதாபாத்திரங்களில் தோன்றினார்.

2015 ஆம் ஆண்டு மலையாள இயக்குனர் அல்போன்ஸ் தான் இயக்கிய ‘பிரேமம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்து அறிமுகப்படுத்தினார். படத்தில் தமிழ் பெண்ணாகவே நடித்திருந்தார் சாய் பல்லவி. பிரேமம் திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது.

பிரேமம் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினையும் மற்றும் பல விருதுகளையும் வென்றார். இதுவரை சினிமாவில் எந்த நடிகையையும் செய்யாத ஒன்றை, அதாவது மேக்கப் இல்லாமல் பிரேமம் படத்தில் நடித்ததற்காக பாராட்டப்பட்டார்.

தொடர்ந்து ‘மாரி 2’, ‘என்ஜே கே’, ‘கார்கி’ போன்ற தமிழ் திரைப்படங்களிலும், மலையாள, தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் சாய் பல்லவி. தற்போது பாலிவுட்டில் தயாராகி வரும் இராமாயணத்தில் ரன்வீர் கபூர் ராமராக நடிக்கும் படத்தில் சாய் பல்லவி சீதையாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், சாய் பல்லவி விஜய் மற்றும் அஜித் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் அதை அவர் நிராகரித்துவிட்டதாகவும் செய்திகள் பரவி வந்தன. அதற்கு விளக்கம் அளித்துள்ளார் சாய் பல்லவி. அவர் கூறியது என்னவென்றால், நான் விஜய், அஜித் படங்களில் நடிக்கமாட்டேன் என்று கூறவும் இல்லை, நிராகரிக்கவும் இல்லை, அது வெறும் வதந்தி தான். அவர்களுடன் நடிக்க நான் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார் சாய் பல்லவி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...