Connect with us

மாநிலங்களவை எம்.பி பதவிக்கு தகுதியல்லாத நபரா நான்? – நடிகை நக்மா கேள்வி

nakma

பொழுதுபோக்கு

மாநிலங்களவை எம்.பி பதவிக்கு தகுதியல்லாத நபரா நான்? – நடிகை நக்மா கேள்வி

நடிகையும் காங்கிரஸ் பிரமுகருமான நக்மா தனக்கு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் காங்கிரஸ் கட்சிமீது அதிருப்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் சுமார் 18 வருடங்களாக நடிகை நக்மா இருந்து வருகிறார். அந்த கட்சி சார்பாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த சூழலில் சுமார் 18 வருடங்களாக  இருந்து வரும் எனக்கு  மாநிலங்களவை வாய்ப்பு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மாநிலங்களவை தேர்தலில் தனக்கு போட்டியிடுவதற்கு தனக்கு தகுதி இல்லையா என நடிகை நக்மா கேள்வியெழுப்பியுள்ளார். நேற்றைய தினத்தில் காங்கிரஸ் கட்சி தனது மாநிலங்களவை தேர்தல் பட்டியலை வெளியிட்டது. அதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இன்ரான் போட்டியிடுகிறார்.

இதனால்  மாநிலங்களவை எம்பி பதவி கிடைக்காத பகிரங்க அதிருப்தியை மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், போட்டியிட்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இன்ரானுக்கு நக்மா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top