அடி தூள்!! டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி..!!

டெல்லியில் நடைப்பெற்ற மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 136 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் தலைநகரான டெல்லியை கைப்பற்றுவதில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி மற்றும் பாஜகவினர் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக வரக்கூடிய மாநகராட்சி தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது.

கடல் சீற்றம்! 3 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றம்..!!

இந்நிலையில் நேற்று முன்தினம் அம்மாநிலத்தில் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைப்பெற்றது. இன்றை தினத்தில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தேர்தலில் வெற்றிபெற பெரும்பான்மையாக 126 இடங்களை கைப்பற்றுவது அவசியம். ஆனால் 136 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றியடைந்துள்ளது.

அனைவருக்கும் வீடு திட்டம்: இன்று முதல் கணக்கெடுப்பு துவக்கம்!!

மேலும், பாஜகவில் 100 இடங்கள், காங்கிரஸ் 10 இடங்கள் மற்றும் பிற கட்சிகள் 4 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. அதோடு குஜராத், இமாச்சலப் பிரதேசங்களிலும் நாளை நடைப்பெறும் வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி பல்வேறு இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.