News
பட்ஜெட் தயாரிக்க முன் அல்வா கிண்டிய நிதியமைச்சர் நிர்மலா
இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் என்பதும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னர் இனிப்பு பொருள் தயாரித்து பட்ஜெட் தயாரிப்பு ஊழியர்களுக்கு வழங்குவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் இன்று பட்ஜெட் அச்சிடும் ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சர் அல்வா கிண்டி வழங்கினார்
இந்த அல்வாவை அனைவரும் ரசித்து சாப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது கையாலேயே அல்வா கிண்டி 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பணிகளை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த அல்வா கிண்டும் நிகழ்ச்சியில் மத்திய நிதித்துறாஇ இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
