
News
பெண் காவலருக்கு ஏற்கனவே 10 லட்சம் இப்ப கூடுதலாக 15 லட்சம் நிவாரணநிதி!
பெண் காவலருக்கு ஏற்கனவே 10 லட்சம் இப்ப கூடுதலாக 15 லட்சம் நிவாரணநிதி!
தற்போது தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் ஓடுகிறது. அதோடு மட்டுமல்லாமல் சாலையில் உள்ள மரங்களை வேரோடு பிடுங்கி வீசப்படுகிறது.
இந்நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் மீது மரம் விழுந்ததில் பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் இன்று காட்டுத்தீ போல் பரவி காணப்படுகிறது. அதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்து உயிரிழந்துள்ளார் பெண் காவலர் கவிதா.
உயிரிழந்த பெண் காவலர் கவிதா குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூபாய் 10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்பட்டிருந்தது.அதோடு மட்டுமில்லாமல் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பெண் காவலருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரின் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறி இருந்தார்.
இந்த நிலையில் பெண் காவலர் குடும்பத்திற்கு மேலும் 15 லட்சம் ரூபாய் கூடுதலாக நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏற்கனவே 10 லட்சம் ரூபாய் அறிவித்த நிலையில் மேலும் 15 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் மரம் விழுந்ததில் காயமடைந்த காவலர் முருகன், தீயணைப்பு வீரர் செந்தில்குமாருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்ட உத்தரவிட்டுள்ளார்.
