Connect with us

பாதி பேர் போலி கையெழுத்து! காட்டுமிராண்டித்தனமான பொதுக்குழு கூட்டம்!!

admk meeting

தமிழகம்

பாதி பேர் போலி கையெழுத்து! காட்டுமிராண்டித்தனமான பொதுக்குழு கூட்டம்!!

இன்றைய தினம் அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதற்கு அனைத்து மாவட்டங்களில் உள்ள அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திடீரென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பாதியிலேயே வெளியேறினார்.

அதனால் பெரும் பரபரப்பு உண்டானது. இந்த நிலையில் இதுகுறித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறினார். தீர்மானங்கள் ரத்து செய்ய உரிமையில்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறினார்.

அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் அவர் கூறினார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை உரிமையாளர் சேர்ந்து தான் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அவைத்தலைவராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டு அதன் மூலம் பொதுக்குழுவே செல்லாததாகி விட்டது என்றும் வைத்திலிங்கம் கூறினார்.

அவைத்தலைவருக்கு பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் கிடையாது என்றும் கூறியுள்ளார். மேலும் பொதுக்குழுவின் தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம் என்றும் கூறினார்.

பொதுக்குழுவில் பங்கேற்றவர்களில் சிலர் போலி கையெழுத்து போட்டுள்ளனர் என்றும் கூறினார். கட்டுப்பாடில்லாத காட்டுமிராண்டித்தனமான பொதுக்குழு நடைபெற்று உள்ளது என்றும் வைத்திலிங்கம் கூறினார்.

பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் தீர்மானங்களில் ஒன்று அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் ஓபிஎஸ் தரப்பில் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறினார். பொதுக் குழுவில் இருந்து வெளியேறிய நிலையில் ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்திய பிறகு வைத்தியலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top