Connect with us

புஷ்பா 2க்கு மூன்று மடங்கு சம்பளத்தை உயர்த்திய அல்லு அர்ஜுன் ! எப்படியோ அந்த லிஸ்ட்ல வந்துடாரு!

locations scouting on for pushpa 2 1200x900 202205819706 1 1

பொழுதுபோக்கு

புஷ்பா 2க்கு மூன்று மடங்கு சம்பளத்தை உயர்த்திய அல்லு அர்ஜுன் ! எப்படியோ அந்த லிஸ்ட்ல வந்துடாரு!

தெலுங்கு மொழியில் கடந்த ஆண்டு வெளியான அதிரடி பரபரப்புத் திரைப்படம் தான் புஷ்பா.இந்தப் படத்தில், அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க பகத் பாசில் தெலுங்கில் அறிமுகமாகி வில்லனாக நடித்திருப்பார், ராஷ்மிகா மந்தண்ணா ஹீரோயினாக நடித்திருப்பார் .

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் 17 டிசம்பர் 2021 தெலுங்கிலும், மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக தயாராகி வருகிறது. முதல்பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாய் அதிரடி ஆக்க்ஷன் உடன் கூடிய அசத்தலான கதையில் இந்த படம் தயாராக உள்ளது.

saami saami fails to match hype around allu arjuns pushpa 001 1 1

இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில் இருவருக்கிடையிலான மோதல் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் புஷ்பா இயக்குனர் சுகுமாரும் தனது சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஹீரோவான அல்லு அர்ஜுனின் சம்பளம் உயர்த்தியுள்ளதாக தெலுங்கு திரையுலகில் கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்காக, நடிகர் அல்லு அர்ஜுனுக்கான சம்பளம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. முதல் பாகத்தில் குறைவான சம்பளம் வாங்கிய அல்லு, தற்போழுது இரண்டாம் பாகத்துக்கு ரூ.125 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வாரிசு படத்தை தொடர்ந்து ராம் சரண் படத்திலும் அதே பிரச்சனையா? படத்தின் வீடியோ லீக்

Pushpa the rule part 2 1024x576 1 1 1

இதன் மூலம் ரஜினிகாந்த், விஜய், இந்தி நடிகர்கள் சல்மான் கான், அக் ஷய்குமார் வரிசையில் சம்பள அதிகம் வாங்கும் நடிகர் பட்டியலில் அவர் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். புஷ்பா: தி ரூல் படத்தின் வழக்கமான படப்பிடிப்பு செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கயுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் புஷ்பா: தி ரூல் மற்றும் படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top