
தமிழகம்
இன்று முதல் சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இருக்கும் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் தொற்று பரவல் சற்று படிபடியாக குறைந்த நிலையில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில் பிரதோஷம், அமாவாசை நெருங்கி வருவதால் விருதுநகரில் இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக்கோயிலில் இன்று முதல் 29ம் தேதி வரை 4 நாட்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக காலை 9 மணி முதல் 11 மணி வரையில் மட்டுமே மலையேற்றத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு குறிப்பிட்ட நாட்களில் மழை பெய்யும் சூழலில் உருவாகினால் பயனத்திற்கு அனுமதி தடை செய்யப்படும் என கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.
மேலும், வார விடுமுறையை ஒட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடியும், ராமநாத சுவாமி திருக்கோயிலுக்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
