இன்று முதல்! ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி..!!

கடந்த சில நாட்களாகவே காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குறிப்பாக மெயின் அருவி, பிலி குண்டு, ஐந்தருவி போன்ற முக்கிய அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

சென்னையை சூழ்ந்த பட்டாசு புகை!! ஒருவர் 31 சிகெரட் பிடிப்பதற்கு சமம்!!

இதற்கிடையில் இன்று காலை நிலவரப்படி 20,000 கன அடி தண்ணீர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இன்று முதல் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதே போல் பரிசல் ஓட்டிகள், பரிசல்களில் பயணிகளை ஏற்றி செல்லும் போது பாதுகாப்பு கவச உடை அணிவித்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட சிலை: தமிழக போலீஸ் அதிரடி!!

மேலும், அரசு வெளியிட்டு இருக்கும் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment