Connect with us

2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி; நைனாமலை பெருமாள் கோயிலில் பக்கதர்கள் தரிசனம்!

செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி; நைனாமலை பெருமாள் கோயிலில் பக்கதர்கள் தரிசனம்!

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 3500 படிக்கட்டுகளை கடந்து கரடுமுரடான பாதையில் நடந்து மலை உச்சியில் உள்ள பெருமாளை பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று நைனாமலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் குவலய வள்ளி தாயாருடன் மலை மீது அமர்ந்தபடி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் கோயிலுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து போவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகப்படியாக இருக்கும் 3600 படிக்கட்டுகளை கடந்து கரடுமுரடான பாதையில் பக்தர்கள் நடந்து சென்று மலை உச்சியில் உள்ள பெருமாளை தரிசித்து செல்வார்கள்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மலைப்பகுதிக்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மலையில் உள்ள பெருமாளை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா என்று கோசம் எழுப்பியவாறு மலை உச்சிக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.

மலை மீது ஏற முடியாத பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top