ஊரடங்கு நாளில் போட்டித்தேர்வுக்கு செல்பவர்களுக்கு அனுமதி! ஆனால் சில கட்டுப்பாடுகள்?

நேற்றைய தினம் தமிழகத்தில் அதிர்ச்சியான தகவல் வெளியானது. அதன்படி பலரும் எதிர்பாராத விதமாக தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்பின்னர் தமிழக அரசும் இன்றைய தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று நேற்று அறிவித்து இருந்தது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு மீண்டும் தொடரும் என்றும் கூறியிருந்தது. இந்த காலகட்டத்தில் ஒரு சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கு காலகட்டத்தில் போட்டித்தேர்வுக்கு செல்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ஊரடங்கு நேரத்தில் போட்டித்தேர்வுக்கு செல்பவர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு அல்லது நிறுவனங்களின் அழைப்பு கடிதத்தை காண்பித்து பயணித்துக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு போது, முன்பு போல் இல்லாமல் தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment