Connect with us

நுழைவு தேர்வு எழுத தீவுக்குதான் போகணுமா? கெத்து காட்டிய எம்.பி. சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன்

தமிழகம்

நுழைவு தேர்வு எழுத தீவுக்குதான் போகணுமா? கெத்து காட்டிய எம்.பி. சு.வெங்கடேசன்

குலாம் நபிஆசாத் மோடியின் கண்ணீரில் கரைந்தார், குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் இருந்து செல்வதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவொரு இழப்புமில்லை என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பேட்டி

மதுரை மேலூரை சேர்ந்த மாணவர் லோகேஸ்வர் மத்திய பல்கலைக்கழக நுழைவு தேர்வில் பங்கேற்க லட்சத்தீவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முயற்சியால் தேர்வு மையம் லட்சத்தீவிலிருந்து மதுரைக்கு மாற்றப்பட்டது,

இதனையடுத்து மாணவர் லோகேஸ்வர் மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதி விட்டு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை தனது குடும்பத்துடன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார், பின்னர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “மாணவர்களின் கல்வி சார்ந்த பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறோம், மதுரை மாணவர் லோகோஸ்வருக்கு கடும் முயற்சிக்கு பின் 7 மணி நேரத்தில் தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது,

மத்திய உயர்க்கல்வித்துறை, தேசிய தேர்வு முகமை, திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் ஆகியோரின் நடவடிக்கைகள் தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது, கல்வி, தேர்வு சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக என்னை எப்போதும் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம், மத்திய அரசு தேர்வுகள் மண்டலம் வாரியாக தேர்வுகளை நடத்த வேண்டும் என்றார்.

மாணவர்கள் பேருந்து விபத்துகளில் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், மாணவர்களுக்கு தேவையான நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். மதுரை – கோவை இடையே அகல இரயில்பாதையாக மாற்றப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பின் இரயில் சேவை செப்டம்பர் 1 லிருந்து இயக்கப்படுகிறது.

குலாம் நபி ஆசாத் மோடியின் கண்ணீரில் கரைந்தார், குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் இருந்து செல்வதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவொரு இழப்புமில்லை” என கூறினார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top