ஒமைக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 150 படுக்கைகள் ஒதுக்கீடு!

உலகமெங்கும் தற்போது வேகமாக பரவி வருகிறது ஒமைக்ரான் வைரஸ். ஒமைக்ரான் வைரஸ். இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலையாக இருக்கலாம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. இத்தகைய வீரியமிக்க ஒமைக்ரான் முதலில் தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய அதன் பின்னர் ஐரோப்பா கண்டம் முழுவதும் வேகமாக பரவுகிறது.

ஒமைக்கிரான்

 

இவை நம் இந்தியாவிலும் பரவாமல் இருக்க இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக நம் தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் எதிரொலியாக  ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 150 படுக்கைகள் ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ஒமைக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 150 படுக்கைகள்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளிலும் ஒமைக்ரான்  சிகிச்சைக்காக 15 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment