டிடிவி உடன் கூட்டணிக்கு தயார்…பாஜக பிரிக்கவில்லை – ஓபிஎஸ்!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரமானது உச்சக்கட்டதை தொட்டுள்ளது. குறிப்பாக ஓபிஎஸ் – இபிஎஸ் உடன் கடும் மோதல்கள் நிலவி வருகிறது.

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் தற்போது நிலவி வரும் சூழலானது ஒரு மாய பிம்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பட்டா கத்தியுடன் அரசு பேருந்தில் கல்லூரி மாணவர்கள்; 2 பேர் கைது!

அதே போல் அதிமுக 2-ஆக பிளவு பட்டதற்கு பாஜக காரணம் இல்லை என கூறியுள்ளார். அதிமுகவிற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த டிடிவி தினகரன் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி சேர்வதாக தெரிவித்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக டிடிவி தினகரனின் கருத்து வரவேற்கத்தக்கதாக கூறிய அவர் வாய்ப்பு ஏற்பட்டால் அவரை சந்திப்பதாக கூறினார்.

தமிழகத்தை நோக்கி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… வானிலை மையம் எச்சரிக்கை!

தொடர்ந்து பேசிய அவர் அதிமுகவை யாராலும் மிரட்ட முடியாது என்றும் அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து ஒன்றுமையாக நிற்பதாக தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment