Connect with us

அப்படிபோடு!! 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் கூட்டணி?

784373 rajinikanth petta1 crop

பொழுதுபோக்கு

அப்படிபோடு!! 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் கூட்டணி?

தமிழ் சினிமாவில் 90 கிட்ஸ் காலக்கட்டத்தில் தொடங்கி இன்று முதல் சூப்பர் ஸ்டாராக கலக்கி வருபவர் நடிகர் ரஜினி காந்த். இந்நிலையில் அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடிகர்கள் விநாயகன், வசந்த் ரவி நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதே போல் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு 2023-ல் ஜெயிலர் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ரஜினியின் 170-வது படத்தில் மாஸ் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதன் படி, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 170 படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top