திமுகவுடன் கூட்டணி? கமல்ஹாசன் கருத்து!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அர்ப்பணிக்கத்தக்க புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அப்போது ஆளும் கட்சியான திமுகவுடனான கூட்டணி குறித்து செய்தியாளர்களுக்கு பதிலளித்தார்.

அவர் கூறியதாவது: இப்போது எதுவும் கூற முடியாது. நீங்கள் காட்சி காட்சியாக தான் செல்ல வேண்டும். இப்போது க்ளைமாக்ஸுக்குப் போக வேண்டாம்” என்றார்.

தனக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். “நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து படப்பிடிப்பை ஒத்திவைத்தேன். மேலும், சவால்களை சந்தித்து படிப்படியாக உயர்ந்து முதல்வராக பதவியேற்றவர் தான் மு.க.ஸ்டாலின்.

மேலும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

சென்னை மாமன்றத்தில் முதன் முறையாக ஒலித்த தமிழ்தாய் வாழ்த்து – காரணம் என்ன?

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘நமது முதல்வர் நமது பெருமை’ என்ற புகைப்படக் கண்காட்சியை பழம்பெரும் நடிகர் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.