
தமிழகம்
ஊக்கமருந்து குற்றச்சாட்டு: தமிழக தடகள வீராங்கனைக்கு 3 ஆண்டுகள் தடை!!!
காமன்வெல்த் போட்டிகளில் தமிழக வீராங்கனை தனலட்சுமி கலந்து கொள்வதற்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு மூன்று ஆண்டுகள் தடகளப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சியை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார்.
அதன்பிறகு நடந்த போட்டியில் தனலட்சுமி முதலிடம் பிடித்ததால் காமன்வெல்த் போட்டியில் விளையாட தனலட்சுமிக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் தேர்வாகும் ஒவ்வொரு நபர்களுக்கும் ஊக்க மருந்து பரிசோதனை செய்வது வழக்கம்.
அப்போது அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்ததால் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தது. அதோடு அவர் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டதால் மூன்று ஆண்டு தடகளப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் போட்டிகளை பொருத்தவரையில் ஊக்க மருந்து பயன்படுத்திய நபர்களுக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டதால் அவருக்கு ஒரு ஆண்டு குறைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
