திரையுலகில் ஒரு ஹீரோயின் சர்வைவ் செய்வதே மிகவும் கடினம். அதிலும் ஹீரோயின் தவிர பிற துறைகளில் உதாரணமாக இயக்குனர் போன்ற பிற பணிகளில் ஒரு பெண் தனக்கு திறமை இருந்தாலும் அங்க அவர்களுக்கான சரியான அங்கீகாரமோ வழிகாட்டுதலோ கிடைப்பதில்லை.
அப்படி இருந்தும் பல ஆண்டுகள் பிரபல இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து துரோகி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்தியவர் தான் பெண் இயக்குனர் சுதா கொங்கரா. முதல் படம் நல்ல கான்செப்ட் தான் ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அதன் பின்னர் இரண்டாவது படமான இறுதிச்சுற்றை இயக்க சுதா நீண்ட நேரம் எடுத்து கொண்டார். சில ஆண்டுகள் கடந்த பின்னரே சுதா அவரின் இரண்டாவது படத்தை இயக்கினார். அந்த சமயத்தில் பல விமர்சனங்களை சந்தித்தாராம். அதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சுதா பேசியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, “இந்த பொண்ணுக்கு ராயபுரம் பத்தி என்ன தெரியும். இவங்க எப்படி ராயபுரம் பத்தி படம் எடுக்க போறாங்கனு கேட்டாங்க. அதுமட்டும் இல்ல நீயெல்லாம் வீட்ல உக்காந்து துணி துவைக்கதான் லாய்க்குன்னு சொன்னாங்க. கமெர்சியல் இல்ல, இது இங்க ஓடாது, ஹிந்தில ஓடும், ஹிந்தி கண்டெண்ட்ன்னு சிலர் சொன்னாங்க.
நிச்சயம் இந்த படம் தமிழ்ல ஓடாது அப்படி இப்படினு இறுதிச்சுற்று படம் வெளியாகும் முன்பு பலர் என்னை விமர்சனம் செய்தார்கள்” என கூறியுள்ளார். ஆனால் விமர்சித்தவர்களின் மூஞ்சியில் கரியை பூசுவது போல இறுதிச்சுற்று படம் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.