அனைத்து செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்: அதிரடி அறிவிப்பு..!

சென்னையின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான வண்டலூர் விலங்கியல் பூங்காவிற்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விடுமுறை என்ற நிலையில் அனைத்து செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் பூங்கா திறந்து இருக்கும் என்றும் கோடை விடுமுறையை ஒட்டி இந்த அறிவிப்பு என்றும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோடை விடுமுறை தற்போது விடப்பட்டுள்ள நிலையில் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முக்கியமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான வண்டலூர் பூங்காவுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு 2500 க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருவதை அடுத்து சென்னை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் வந்து வருகை தருகின்றனர்

இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை என்பதால் அன்றைய தினத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் வருகை அதிகமாக இருக்கும் காரணத்தினால் செவ்வாய்க்கிழமை விடுமுறை இல்லை என்று வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோடை விடுமுறை முடியும் வரை அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை அனைத்து செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் பூங்கா செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வண்டலூர் பூங்காவுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் உள்ளது என்பதும் அதேபோல் பஸ் வசதியும் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வண்டலூர் பூங்காவுக்கு செல்லும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி அனைத்து நாட்களிலும் செல்லலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews