தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருடைய அடுத்த படத்தின் தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வர தொடங்கி உள்ளன
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் நெல்சன் இயக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் உறுதி செய்யப்பட்டுள்ளன
இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் வில்லனாக அருண் விஜய் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு இந்த படத்தில் விஜய்க்கு சமமான கேரக்டர் என்றும் கிட்டத்தட்ட மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதிக்கு இணையான கேரக்டர் என்றும் கூறப்படுகிறது
அதேபோல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இடம்பெற்ற பூவையார் என்ற சிறுவனும் இந்த படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தளபதி விஜய் படத்தில் பூஜா ஹெக்டே, அருண்விஜய் மற்றும் பூவையார் ஆகிய மூவரும் நடிக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் சில முன்னணி நட்சத்திரங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது