விழுப்புர மக்களே பயப்படவேண்டாம்; இங்கிலாந்திலிருந்து வந்த 3 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை!: அமைச்சர் சுப்பிரமணியன்;

உலகிற்கே மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி வலம் வந்த ஒரு வைரஸ் கிருமி என்றால் அதனை கொரோனா என்றே கூறலாம். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற பெயரில் வேகமாக பரவியது.

ஒமைக்கிரான்

இதனை இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலையாக இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. இந்தியாவில் ஒமைக்ரான்  நோய் பரவாமல் தடுக்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும் ஒமைக்ரான்  நோயின் பரவல் கண்டறியப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் நேற்றைய தினம் முடிவில் 3 பேருக்கு இந்த ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் தமிழகத்தில் புதிதாக மற்றொரு மூன்று பேருக்கும் ஒமைக்ரான் பரவியதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

சுப்பிரமணியன்

அதன்படி வெளிநாடுகளிலிருந்து தொற்றுடன் வந்த 3 பேருக்கு ஒமைக்ரான்  பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இங்கிலாந்திலிருந்து வந்த இளைஞருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் சுப்பிரமணியன் இவ்வாறு கூறியுள்ளார்.

இங்கிலாந்து இளைஞரின் மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் விழுப்புரத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி அளித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment