கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது. இந்நிலையில் நாளை முதல் சில ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தளர்வுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் நாளை முதல் அரசியல் மற்றும் கலாச்சார கூட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 500 பேர் வரை கலந்து கொள்ளலாம் எனவும் இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 250 நபர்கள் கலந்து கொள்ளலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும், கொரோனா கட்டுப்பாட்டில் உள்ள தளர்வுகள் நாளை முதல் நீக்கப்படுவதாகவும் பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம் என தெரிவித்துள்ளார்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.