Connect with us

ரஷ்யா மீது இந்த பொருளாதார தடைகள் எல்லாம் போதாது!! எங்களை தாக்கியவர்களை மன்னிக்கவும், மறக்கவும் மாட்டோம்!!!

zelensky

News

ரஷ்யா மீது இந்த பொருளாதார தடைகள் எல்லாம் போதாது!! எங்களை தாக்கியவர்களை மன்னிக்கவும், மறக்கவும் மாட்டோம்!!!

ரஷ்யா மீது இந்த பொருளாதார தடைகள் எல்லாம் போதாது!! எங்களை தாக்கியவர்களை மன்னிக்கவும், மறக்கவும் மாட்டோம்!!!

தற்போது ரஷ்ய அதிபர் புட்டின் தங்கள் நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்த 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்கி இருந்தார். இந்த நிலையில் ஜெலன்ஸ்கி தற்போது ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் போதாதென்று வீடியோவில் பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.

அந்தப்படி வீடியோவில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எங்கள் நாட்டின் மீது கொடூரங்களை நிகழ்த்தியவர்களை மறக்கவும் மன்னிக்கவும் மாட்டோம் என்று கூறினார். அப்போது பேசிய அவர் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் அனைத்தும் போதாது என்றும் கூறியிருந்தார்.

போரின்போது எங்கள் மண்ணில் அட்டூழியங்கள் நிகழ்த்தியவர்களை கண்டிப்பாக தண்டிப்போம் என்று உக்ரைன் அதிபர் கூறினார். ரஷ்ய படைகள் குண்டுகளை வீசி திட்டமிட்டு படுகொலைகளை நிகழ்த்துவதால் குழந்தைகள் உள்ளிட்ட உயிரிழந்து உள்ளனர் என்றும் ஜெலன்ஸ்கி கூறினார்.

இன்றைய தினம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top