Connect with us

கடந்த ஆட்சியில் இன்றைய முதலமைச்சர் மீது தொடரப்பட்ட 18 அவதூறு வழக்குகளும் ரத்து!

mk stalin 1200

செய்திகள்

கடந்த ஆட்சியில் இன்றைய முதலமைச்சர் மீது தொடரப்பட்ட 18 அவதூறு வழக்குகளும் ரத்து!

கடந்த ஆட்சியில் இன்றைய முதலமைச்சர் மீது தொடரப்பட்ட 18 அவதூறு வழக்குகளும் ரத்து!

நம் தமிழகத்தில் முதல் முறையாக முதல்வராக உள்ளார் மு.க.ஸ்டாலின் அவர் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து கொண்டு வருகிறார். அவர் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முதலமைச்சர் மீதான 18 அவதூறு வழக்குகளையும் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016 முதல் 2021ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் முதலமைச்சருக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறியதாக அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது.

அனைத்து கட்சித் தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்கையும் திரும்ப பெற அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது. அரசாணைகளை ஏற்று முதலமைச்சர், முரசொலி செல்வம், கலைஞர் டி.வி ,ஆசிரியர் திருமாவேலனுக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசாணை வெளியிட்டுள்ளதாக அரசு அளித்த விளக்கத்தை ஏற்று அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top